13ஏ சட்ட திருத்த விவகாரம்: 4ம் தேதி இந்தியா வரும் ராஜபக்சேவின் தம்பி பாசில்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரவும், இனப் பிரச்சனைக்கு தீர்வு காணவும் 1987ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கும், இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஆட்சியில் தமிழர்களும் பங்குகொள்ளும் வகையில் இலங்கை அரசியல் சட்டத்தின் 13ஏ பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் அந்த சட்டத்தை தற்போதைய ராஜபக்சே அரசு செயல்படுத்தவில்லை.
வரும் செப்டம்பர் மாதம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மகாண கவுன்சில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தமிழர்கள் ஆட்சியில் பங்குகொள்ளாத முடியாதபடி 13ஏ சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து அதை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் முடியும்வரை 13ஏ சட்டதிருத்தத்தை கிடப்பில் போடுமாறு இந்தியா ராஜபக்சே அரசை வலியுறுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு 13ஏ சட்டத்தை பாராபட்சமாக திருத்தக் கூடாது என்று வலியுறுத்தினார். ஆனால் ராஜபக்சேவோ ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீறவில்லை என்றும், சட்ட திருத்தம் பற்றி நாடாளுமன்ற தேர்வுக்குழு தான் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார். இது குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை வரும் 9ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்வுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நாடாளுமன்ற தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கபதில்லை என்று தமிழ் தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதிபர் ராஜபக்சேவின் தம்பி பாசில் ராஜபக்சே வரும் 4ம் தேதி கொழும்பில் இருந்து புறப்பட்டு டெல்லி வருகிறார். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்து 13ஏ சட்டதிருத்தம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
முன்னதாக தமிழ் தேசிய கூட்டணி கட்சியினர் டெல்லி வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து 13ஏ சட்டத்தை நீர்த்துப் போக வைக்க இலங்கை அரசு செய்து வரும் செயல்கள் குறித்து தெரிவித்தனர். மேலும் இந்த சட்டத்தில் மாற்றும் எதுவும் கொண்டு வரவிடாமல் செய்ய நடவடிக்கை எடுக்குமாகறு அவர்கள் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டனர்.
பாசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாடு அமைச்சராக இருப்பதுடன் அவரது அதிபர் சகோதரரின் அரசியல் ஆலோசகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications