Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா ‘மலிவு விலை காய்கறிக் கடைகளை’ கொஞ்சம் சீக்கிரமா திறந்தா தேவலை...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட அம்மா காய்கறிக்கடைகளை அதிகாலையிலேயே திறந்தால் இன்னும் உபயோகமாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் வாழும் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அம்மா மலிவு விலை உணவகங்களை ஆரம்பித்தார். அதன் ஏகோபித்த ஆதரவைத் தொடர்ந்து அம்மா உணவகம் மற்ற மாநகராட்சிக்கும் விரிவு செய்யப்பட்டது.

அடுத்தபடியாக, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் விலை வாசி உயர்வால் அல்லல் படுவதைக் கண்டு, காய்கறி விலையைக்கட்டுப்படுத்தும் வகையில், மலிவு விலை காய்கறி கடைகளை திறந்தார் முதலமைச்சர்.

பண்ணைப் பசுமை காய்கறிக் கடைகள்...

பண்ணைப் பசுமை காய்கறிக் கடைகள்...

கடந்த சில வாரங்களுக்கு முன், காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையிலும் சென்னையில், முதல் கட்டமாக 31 இடங்களில், ‘பண்ணைப்பசுமை காய்கறி கடைகள்‘ என்ற பெயரில் தொடங்கப்பட்டன மலிவு விலை காய்கறிக் கடைகள்.

அம்மா காய்கறிக்கடை...

அம்மா காய்கறிக்கடை...

இதனை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். வைத்த பெயர் என்னவோ, ‘ பண்ணை பசுமை காய்கறி கடைகள்' தான், ஆனால் மக்கள், ‘அம்மா காய்கறி கடை' என்றே செல்லமாக அழைக்கிறார்கள்.

முன்னோட்டமாக 31 கடைகள்...

முன்னோட்டமாக 31 கடைகள்...

முதல் கட்டமாக, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ராஜா அண்ணாமலைபுரம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், பெரியார் நகர், கண்ணம்மா பேட்டை மற்றும் துரைப்பாக்கம், அடையாறு, ஷெனாய் நகர், தாம்பரம், அண்ணாநகர் என நகரில் 31 இடங்களில் அம்மா காய்கறி கடைகள் திறக்கப்பட்டு, அவற்றில் காய்கறி விற்பனை வெகு ஜோராக நடைபெற்று வருகின்றன.

சிறப்பு விலை காய்கறிகள்...

சிறப்பு விலை காய்கறிகள்...

மலிவு விலை காய்கறி கடைகளுக்கு , விவசாயிகளின் விளை நிலங்களிலிருந்தும், கூட்டுறவு சங்கங்களின் கொள்முதல் மையங்களிலிருந்தும் காய்கறிகள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுவதால், இங்கு கோயம்பேடு மார்க்கெட்டு விலையைவிட மிக குறைவான விலையில் காய்கறிகள் விற்கப்படுகிறது அதன் தனிச் சிறப்பு.

கெடுபிடி...

கெடுபிடி...

விலை குறைவாக இருப்பதால், உணவகங்களைப் போலவே, அம்மா காய்கறிக் கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. சில ஹோட்டல்காரர்கள் சந்து கேப்பில் சிந்து பாடும் விதமாக, மலிவு விலையில் காய்கறிகளை வாங்கிச் சென்று விடுகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் ஒருவருக்கு ஒரு கிலோ காய் மட்டுமே என்ற கொள்கையை பின்பற்றுகின்றனர் கடைக்காரர்கள்.

கோரிக்கை...

கோரிக்கை...

பொதுவாக, இந்த கடைகள் காலை 9 மணியில் இருந்து பகல் 12 மணி வரையும், மாலை 4 மணியில் இருந்து 7 மணிவரையும் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.சென்னையில் பணிக்கு செல்லும் பெண்கள் அதிகம் ஆதலால், இந்த நேரத்தை மாற்றி அமைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் பொதுமக்கள். மேலும், ஞாயிறு விடுமுறை தினத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் நிவர்த்தி...

விரைவில் நிவர்த்தி...

பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து டி.யூ.சி.எஸ்.அதிகாரிகளிடம் கேட்டபோது, "கடைகளைத்திறந்து சில நாட்களே ஆகின்றன. போகப்போக மக்கள் விருப்பம் நிறைவேற்றப்படும். அதிகப்படியான ஊழியர்கள் நியமனம், எடைபோடும் இயந்திரங்களை அதிகப்படுத்தல், காய்கறிவகைகளை தரம்பிரித்தல் போன்ற குறைபாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும்.

சூடு பிடித்த வியாபாரம்...

சூடு பிடித்த வியாபாரம்...

அம்மா காய்கறி கடைகளில் தினசரி ஏறக்குறைய 5 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்கப்படுகின்றன. டி.யூ.சி.எஸ்.கடைகளில் மட்டும் இதுவரை ஏறக்குறைய 5½ லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்கப்பட்டுள்ளன.

குள்ளநரிக்கூட்டம்...

குள்ளநரிக்கூட்டம்...

அம்மா காய்கறி கடைகளில், வெளிமார்க்கெட் விலையைவிட மிக மிக குறைவாக கிடைப்பதால், சில ஓட்டல்களில் இருந்து 5, 10 கிலோ என்று கிலோ கணக்கில் காய்கறிகளை வாங்குவது கண்டறியப்பட்டது.

நபர் ஒன்றுக்கு ஒரு கிலோ மட்டுமே...

நபர் ஒன்றுக்கு ஒரு கிலோ மட்டுமே...

அம்மா காய்கறி கடைகளுக்கு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மட்டுமின்றி, இப்போது, வசதி படைத்த மக்களும் அதிக அளவில் வரத்தொடங்கிவிட்டனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அம்மா காய்கறி கடைகளில், ஓட்டல்களுக்கு காய்கறி விற்பது தவிர்க்கப்பட்டுள்ளது. தக்காளி போன்ற காய்கறி வகைகள் ஒரு நபருக்கு ஒரு கிலோ மட்டும் விற்கப்படுகிறது' எனத் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+