இடதுசாரிகளின் மூன்றாவது அணி.. அரசியல் கட்சிகளுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு!

மதுரையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பெரும் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவே வழிவகுத்து செயல்படுகின்றது. இயற்கை எரிவாயு விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. 3 வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயரும் அபாயம் உள்ளது.
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 5 லட்சம் கோடியை வரி சலுகையாக பெரும் முதலாளிகளுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி பின்பற்றிய அதே கொள்கையைத் தான் காங்கிரசும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாரதிய ஜனதா கட்சி தமது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது. அவரும் பெரும் நிறுவனங்களுக்கு நிலமும், மின்சாரமும் இன்னும் பல வளங்களை இலவசமாக தருகிறார். எனவே, அவரது தலைமையில் மத்தியில் அரசு அமையுமானால், இந்தியாவில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. காங்கிரசுக்கு மாற்று என பாரதிய ஜனதா கட்சியைக் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மக்கள் விரோத கொள்கைகளில் இரு கட்சிகளும் ஒரே நிலையில் தான் உள்ளனர்.
மக்கள் நலன், மதசார்பின்மை ஆகியவற்றின் அடிப்படையிலான மாற்று கொள்கைகளுக்கு தேவை ஏற்பட்டிருக்கிறது. அதனை இடதுசாரிகளால் மட்டுமே கொடுக்க முடியும். எனவே, மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் அனைத்தும் இடதுசாரி கூட்டணியை ஆதரித்து மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications