ஜார்க்கண்ட்: காங்.- ஜே.எம்.எம். கூட்டணி அரசு அமைக்க முடிவு? ஹேமந்த் சோரன் முதல்வர்?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக் காலம் முடிவடையும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இணைந்து்ம் கூட்டணி அரசை அமைக்க உள்ளதாகவும் ஜே.எம்.எம். கட்சியின் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ஏற்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இணைந்து கூட்டணி அரசை நடத்தி வந்தன. கடந்த ஜனவரி மாதம் அர்ஜூன் முண்டா தலைமையிலான கூட்டணி அரசுக்கான ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா விலக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 18-ந் தேதி அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இந்த 6 மாத ஜனாதிபதி ஆட்சிக் காலம் என்பது வரும் 18-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிகே ஹரி பிரசாத் மற்றும் ஷகீல் அகமது ஆகியோர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சவின் தலைவர் சிபுசோரனுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் புதிய அரசு அமைப்பது என்றும் சிபுசோரனின் மகனும் முன்னாள் துணை முதல்வருமான ஹேமந்த் சோரனை புதிய முதல்வராக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்ட்சபையில் காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்.எல்.ஏக்கள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் இன்னும் சில நாட்களில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் உரிமை கோரக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications