உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம

நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜூலை 19-ந் தேதியன்று சதாசிவம் பொறுப்பேற்க உள்ளார். இதனையொட்டி தி டெலிகிராப் ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது இடஒதுக்கீடு முறை பின்பற்ற வேண்டும். இந்நியமனங்களின் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம், இடஒதுகீட்டை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் அனைத்து சமூக மக்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும். அதற்காக ஏற்கெனவே கடைபிடித்து வரும் குறிப்பிட்ட தகுதிகளைப் புறக்கணித்துவிட வேண்டும் என்பது அல்ல. அதாவது தகுதியற்ற நபர்களை தேர்வு செய்வது என்பது இதற்கு அர்த்தம் அல்ல..ஆனால் இடஒதுக்கீடு என்ற சலுகை வழங்கப்பட வேண்டும்.
அரசு நிர்வாகத்துகு நீதிமன்றங்கள் எதிரி அல்ல.. நீதித்துறை, சட்டசபை, அரசு நிர்வாகம் மூன்றும் அரசியல் சாசனத்தின் 3 அங்கங்கள். ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் இணைந்து இயங்கி வருகின்றன. பொதுவாக அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது; அதே போல்தான் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை அரசாலும் தடுக்கவும் தலையிடவும் முடியாது; நீதித்துறை ஊழல்களுக்கு அப்பாற்பட்டது என நான் சொல்லவில்லை. ஆனால் இதர துறைகளை ஒப்பிடுகையில் நீதித் துறையில் குறைவுதான். ஊழல் வழக்குகளில் கடந்த 5 ஆண்டுகளில் விசாரணை விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது. குற்றத்தின் அடிப்படையிலேயே ஜாமீன் அளிப்பதும், மறுக்கப்படுவதும் முடிவு செய்யப்படுகிறது; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து விபரங்களை அளிப்பது தவறு அல்ல என்றார் அவர்.












Click it and Unblock the Notifications