முதலமைச்சர் விஜய் குடும்பம்.. மீண்டும் ஒன்று சேருவார்கள்! ஜேசன் சஞ்சய் முயற்சி, திரிஷா ஏஐ போட்டோ பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படம், விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகும் காலகட்டத்தில், இந்த குடும்பம் மீண்டும் ஒன்றாக இணையும். சங்கீதா நீதிமன்றம் சென்றது தற்காலிகமான ஒரு மன ஆற்றாமை மற்றும் கோபத்தினால் மட்டுமே தவிர, பிரியும் விருப்பம் 2 பேருக்குமே கிடையாது. பிள்ளைகளின் முயற்சியால் விரைவில் அம்மாவும் அப்பாவும் பேசி ஒன்று சேர்வார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

VOT Blast என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "முதலமைச்சர் விஜய் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் சொந்தமானவராக இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை என்று வரும்போது, அவர் தனது குடும்பத்திற்கும், மனைவி சங்கீதாவிற்கும், பிள்ளைகளுக்கும் மட்டுமே சொந்தமானவர்.

CM Vijay Jason Sanjay Trisha AI Photo Vijay Family

திரிஷா போன்ற நடிகைகளின் தலையீடு என்பது ஒரு ரயில் பயணம் போன்றதுதான். ஸ்டேஷன் வந்ததும் பயணிகள் இறங்குவது போல, திரிஷாவின் பயணம் முடிந்துவிட்டது. குடும்பத்தை உடைப்பது எளிது, சேர்ப்பதுதான் கடினம். விஜயின் பழைய பேட்டிகளை பார்த்தால் அவர் எந்தளவுக்கு நல்ல குடும்ப தலைவன் என்பது புரியும்.

விஜய் - திரிஷா

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தின் மூலம் தனது சொந்த முயற்சியால் சினிமா துறையில் போராடி வருகிறார். ஆனால் திமுகவினர் அவரது முயற்சியை ஒரு காமெடியாக மாற்றி ட்ரோல் செய்து காயப்படுத்துகிறார்கள்.

எதிர்க்கட்சியினர் சட்டசபையில் நேருக்கு நேர் மோதாமல், நாக்கில் நரம்பில்லாமல் விஜயின் குடும்ப விஷயங்களையும், செங்கல்பட்டு நீதிமன்ற விவாகரத்து வழக்கையும் மையப்படுத்தி கேலி பேசுவது கண்டிக்கத்தக்கது. எல்லார் குடும்பத்திலும் விவாகரத்து நடக்கிறது, ஏன் ஸ்டாலின் குடும்பத்தில் யாரும் விவாகரத்து செய்யவில்லையா? தைரியம் இருந்தால் சட்டசபையில் நேருக்கு நேர் மோதுங்கள்.

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா

விஜயின் குடும்பம் இந்த அளவிற்குப் பிரிந்து நிற்பதற்கும், குடும்பம் கெடுவதற்கும் பின்னணியில் ஜெகதீஷ், புஸ்ஸி ஆனந்த், திரிஷா ஆகிய 3 பேரும்தான் முக்கிய காரணம். இந்த நபர்களின் தலையீடு இப்போது ஒழிந்துவிட்டதால், விஜய் ஒரு முழு அரசியல்வாதியாகவும் தமிழ்நாட்டின் முதன்மை சக்தியாகவும் உருவெடுத்துள்ளார்.

ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படம் மற்றும் விஜயின் ஜனநாயகன் படம் வெளியாகும் காலகட்டத்தில், இந்த குடும்பம் மீண்டும் ஒன்றாக இணையும். சங்கீதா கோர்ட்டுக்கு போனது தற்காலிகமான ஒரு மன ஆற்றாமை, கோபத்தினால் மட்டுமே தவிர, பிரியும் விருப்பம் 2 பேருக்குமே கிடையாது. பிள்ளைகளின் முயற்சியால் விரைவில் அம்மாவும் அப்பாவும் பேசி ஒன்று சேர்வார்கள்.

விஜய்க்கும் சங்கீதாவிற்கும் விரிசல்

விஜய்க்கும் சங்கீதாவிற்கும் உள்ள விரிசலுக்கு 3வது நபரின் தலையீடே காரணம். இருவருமே கோபத்தை வெளியில் கொட்டும் நபர்கள் கிடையாது. விஜய் நிஜ வாழ்க்கையில் சாந்தமானவர். தன் கணவர் மீது சங்கீதாவிற்கு அபரிமிதமான அன்பு இருக்கிறது. கோர்ட் சென்ற நிலையிலும், கணவரின் நற்பெயரைக் காக்கும் பொருட்டு "ஒரு நடிகை" என்று மட்டுமே குறிப்பிட்டு சங்கீதா தன் கணவரை பாதுகாத்துள்ளார்.

அடிஷனல் நடிகை - ஏஐ போட்டோ

ஆனால், தங்களை "அடிஷனல்" ஆக நினைத்துக் கொள்ளும் திரிஷா தரப்பினர், முதலமைச்சரின் கண்ணியத்தை கெடுக்கும் விதமாக நள்ளிரவில் கேக் வெட்டுவது போன்ற போட்டோக்களை வெளியிடுகிறார்கள். திரிஷாவின் பிறந்தநாளுக்கு வெளியான அந்த போட்டோ முழுக்க முழுக்க ஒரு ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. அந்த போட்டோ வெளியான மறுநாளே திரிஷாவுடனான மொத்த தொடர்பும் கட் ஆகிவிட்டது.

விஜய் இப்போது திரிஷாவை முழுமையாக ஒதுக்கிவிட்டு, தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துவிட்டால் வதந்தி பரப்புபவர்களின் வாய் மூடிவிடும். அதன் பிறகு எதிர்க்கட்சியினர் தங்களது டிராக்கை மாற்றி, "முதலமைச்சர் குடும்ப அரசியல் செய்கிறார்" என்ற புதிய சப்ஜெக்ட்டைக் கையில் எடுத்து விமர்சிக்கத் தொடங்குவார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+