கையாலாகாத மத்திய அரசு தனது திறமையின்மையை சாதாரண மக்களின் மீது திணிப்பதா?: ஜெயலலிதா காட்டம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
17.01.2013 அன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்ட போதே, அதனை நான் ஒரு அறிக்கை வாயிலாகக் கண்டித்தேன்.
இந்த முடிவு டீசல் விலை ஏற்றத்திற்குத் தான் வழிவகுக்குமே அல்லாமல், ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு வழிவகுக்காது என்றும், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்திக் கொண்டு வரும் நிலை தான் டீசலுக்கும் இனி ஏற்படும் என்றும் எச்சரித்து, ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற கொள்கை முடிவினை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினேன்.
மாதாமாதம் டீசல் விலையை உயர்த்தி வரும் எண்ணெய் நிறுவனங்கள், நள்ளிரவு முதல் டீசல் விலையை மேலும் லிட்டருக்கு 50 காசுகள் என்ற வீதத்தில் உயர்த்தியுள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் விலை ஆகியவற்றைக் காரணம் காட்டி, டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
மாதாமாதம் இவ்வாறு டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துவது, "தேளுக்கு இடம் கொடுத்தால், ஜாமத்துக்கு ஜாமம் கொட்டும்" என்ற பழமொழியைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகிறது.
இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, அதன் காரணமாக வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கும் ஏழை எளிய நடுத்தர மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்குவதாகவே இந்த விலை உயர்வு அமையும்.
இந்திய ரூபாயின் வீழ்ச்சி என்பது, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, நிதிக் கொள்கை, ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கை ஆகிய பல்வேறு காரணங்களால் ஏற்பட்டது ஆகும். இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த கையாலாகாத மத்திய அரசு தனது திறமையின்மையை சாதாரண மக்களின் மீது திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
அரசின் திறமையின்மையை எல்லாம் பொதுமக்கள் மீது திணிப்பது என்பது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பொதுமக்களின் உணர்வுகளுக்கு சற்றும் மதிப்பளிக்காமல், பொதுமக்களிடமிருந்து வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டதையே காட்டுகிறது.
இந்த டீசல் விலை உயர்வு வாகனக் கட்டணங்கள், அனைத்துப் பொருட்களின் விலைகள் ஆகியவை உயர வழிவகுக்கும். இதன் காரணமாக, விலைவாசி மேலும் உயரும். சாமானிய மக்களுக்கு பெரும் துன்பத்தை விளைவிக்கும். எனவே, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, இந்த டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications