ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆஜராக விலக்கு கோரி தயாளு மனு- விசாரிக்க நீதிபதி மறுப்பால் பரபரப்பு!!

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கலைஞர் டிவியும் ஆதாயம் அடைந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் பங்குதாரரான தயாளு அம்மாள் ஒரு முக்கிய சாட்சி என்றும் அவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் தமக்கு உடல்நிலைக் குறைவு என்றும் தம்மால் டெல்லி வர இயலாது.. அதனால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் தயாளு மனுத்தாக்கல் செய்தார். இதை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி வீணா பீர்பால், தயாளு அம்மாளின் மனுவானது விசாரணையை முடக்கும் உள்நோக்கம் கொண்டது. அவர் டெல்லி வந்தால்தான் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய முடியும் என்று கூறியதுடன் விசாரணையை இன்று ஒத்திவைப்பதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இம்மனு விசாரணைக்கு வந்த போது, தம்மால் தயாளு அம்மாளின் மனுவை தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரிக்க முடியாது என்றும் நாளை வேறொரு பெஞ்ச் இம்மனுவை விசாரிக்கும் என்று கூறினார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications