பாமக போராட்டத்தில் பஸ்கள் எரிப்பு.. அன்புமணி, காடுவெட்டி குருவிடம் விசாரணை

மரக்காணம் வன்முறையைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பாமக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து வட தமிழகத்தில் பெரும் கலவரம் வெடித்தது. பல ஊர்களில் பஸ்கள் கொளுத்தப்பட்டன, தாக்கி உடைக்கப்பட்டன, மரங்கள் வெட்டப்பட்டன, டாஸ்மாக் கடைகள் தாக்கப்பட்டன.
இதையடுத்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அபராதம் வசூலிக்கவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரை நியமித்தது தமிழக அரசு.
இந்த கமிஷன் முன்பு தற்போது பாமகவினர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். நேற்று காடுவெட்டி குருவும், அன்புமணி ராமதாஸும் ஆஜரானார்கள்.
விசாரணைக்கு வந்திருந்த இருவரும் அங்கு சந்தித்துப் பேசிக் கொண்டனர். அப்போது பாமக வழக்கறிஞர் பாலுவும் உடன் இருந்தார்.
காடுவெட்டி மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து
இந்த நிலையில் காடுவெட்டி குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
இவர் தவிர மேலும் 19 பாமகவினர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையும் செல்லாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications