இன்று நள்ளிரவு முதல் என்.எல்.சி. ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் என்.எல்.சி. ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
இருப்பினும் மத்திய அரசு தமது நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இன்று இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது. ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டு அல்லது 3 நாட்கள் தொடர்ந்து நீடித்தால் மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு தென்னிந்தியா முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது.
நெய்வேலி முதல் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட்டும், 2-வது அனல் மின்நிலையத்தில் 1470 மெகாவாட்டும், முதல் அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் 420 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 2490 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது. இதில் சராசரியாக 2ஆயிரம் மெகாவாட் உற்பத்தி ஆகும். இதில் 1200 மெகா வாட் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகிறது. மீதி மின்சாரம் அனைத்தும் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்படுகிறது. அவற்றை மத்திய மின் பகிர்மான அமைப்பு புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிக்கு பகிர்ந்தளிக்கிறது.
இன்று இரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியதும் அனைத்து கருவிகளையும் இயக்காமல் வெளியேறிவிடுவர்.இ இதனால் படிப்படியாக மின் உற்பத்தி தானாகவே நின்றுவிடும். நாளை மாலைக்குள் பாதி அளவுக்கு மேல் மின் உற்பத்தி முடங்கிவிடும். அதைத் தொடர்ந்து விரைவிலேயே முற்றிலும் மின் உற்பத்தி நின்றுவிடும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications