அடுத்தடுத்து 5 கல்யாணம்.. தாறுமாறான கள்ளக்காதல்...நெல்லையில் ஒரு 'கல்யாண ராசா'!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லையில் முதல் மனைவிக்குத் தெரியாமல் அடுத்தடுத்து கள்ளக்காதலில் ஈடுபட்டு 4 பேரை மணந்து மோசடி செய்துள்ளார் ஒரு நபர். இதுகுறித்து முதல் மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் 36 வயதான மதிவாணன். இவர் ஒரு வியாபாரி. இவரது மனைவி பெயர் அனிதா. காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

அனிதா, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். அதில்,

எனது கணவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடம் பணத்தை பறித்து வருகிறார். எனக்கு தெரிந்து 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இருக்கிறார். இது குறித்து நான் கேட்டதால், மது குடித்துவிட்டு வந்து என்னை அடித்து உதைத்தார்.

கடந்த 8-5-2010 அன்று சரோஜினி என்ற பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து, மதுரையில் அவருடன் குடும்பம் நடத்திவிட்டு அவரை விரட்டி விட்டார். பின்னர் களக்காட்டைச் சேர்ந்த மரகதம் என்ற பெண்ணை திருமணம் செய்து, அவரிடம் பணத்தை பறித்துவிட்டு விரட்டினார்.

தற்போது சரிதா என்ற கேரளா பெண்ணை அழைத்து வந்து ஒரு மாதமாக அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

சரிதா மஸ்கட்டில் தனது கணழர், 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். பேஸ்புக் மூலம் சரிதாவுக்கு வலை விரித்துள்ளார் மதிவாணன். இதையடுத்து அவரது வலையில்சரிதா விழுந்தார். பின்னர் தனது குழந்தைகளை கூட்டிக் கொண்டு கேரளாவுக்கு வந்த சரிதா, பின்னர் அங்கிருந்து நெல்லை வந்து விட்டார்.

நெல்லையில் கடந்த ஒரு மாதமாக எனது கணவருடன் குடும்பம் நடத்தி வருகிறார் என்று கூறியுள்ளார் அனிதா.

இந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+