வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சென்னை இளைஞர்!
சென்னை: மதுரையிலிருந்து சென்னை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சென்னையைச் சேர்ந்த இளைஞர் நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது. அந்த இளைஞரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் இருந்து நேற்று காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காலை 8.55 திருச்சிக்கு வந்தது வைகை எக்ஸ்பிரஸ் ரயில். அப்போது சென்னை தெற்கு ரயில்வே நிலையத்துக்கு தொடர்பு கொண்டு போனில் பேசிய மர்ம நபர் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அத்துடன் முடிந்தால் என்னை பிடித்துக் கொள்ளுமாறும் மர்ம நபர் சவால் விட பெரும் பீதி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேர சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
போலீசாரின் தீவிர நடவடிக்கையில் அந்த செல்போனுக்குரிய நபர் சென்னை திருவேற்காட்டை சேர்ந்த வாலிபர் நாகராஜ் என்பவர் என தெரிய வந்தது. அவர் நேற்று காலை 9 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் இருந்து பேசியதும் அதன்பிறகு ஸ்ரீரங்கம் பகுதியில் சுற்றியது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் திருச்சியிலேயே இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் போலீசாருக்கு நாகராஜ் அனுப்பிய எஸ்.எம்.எஸில் தம்மை மன்னித்துவிடுமாறு கூறியிருக்கிறான். இதனால் விரைவில் அவன் சிக்கிவிடுவான் என தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications