சிவகங்கை: 8 வயது சிறுமி மர்ம கொலை… பாலியல் பலாத்காரமா? என சந்தேகம்
சிவகங்கை: சிவகங்கையில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன், உஷாராணி தம்பதியரின் 8 வயது மகள் அக்ஷயா. கடந்த 4ஆம் தேதி பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அக்ஷயா, வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்திருக்கிறார். பின்னர் சிறிது நேரம் கழித்து அக்ஷயாவை பெற்றோர் தேடியபோது காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அக்ஷயா கிடைக்காததால் உடனே போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இவர்களது பக்கத்து வீட்டில் சூப் கடை வைத்திருக்கும் அமல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக அமல்ராஜ் வீட்டு பூட்டியபடியே இருந்திருக்கிறது. இன்று காலை அமல்ராஜ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து சந்தேகம் அடைந்த அக்ஷயாவின் பெற்றோர்கள், போலீசில் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அமல்ராஜின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்திருக்கிறார்கள்.
அப்போது, வீட்டின் சமையல் அறையில் சிறிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் சிறுமி அக்ஷயா கொலை செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து அக்ஷயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைவறைவான அமல்ராஜை தேடி வரும் போலீசார், மருத்துவ பரிசோதனையின் முடிவில் தான் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாளா? என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர். 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications