புத்தகயாவை இந்தியன் முஜாஹிதீன் தாக்கக்கூடும்: அக்டோபரிலேயே எச்சரித்த டெல்லி போலீஸ்
டெல்லி: புத்தகயா கோவிலில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு பின்னால் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி கோவிலில் இன்று காலை 8 குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் மகாபோதி கோவிலை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தாக்கக்கூடும் என்று டெல்லி போலீசாரின் சிறப்பு பிரிவு பீகாரின் டிஜிபி மற்றும் கயா மாவட்ட எஸ்.பி. ஆகியோரை கடந்த அக்டோபர் மாதமே எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த விசாரணையின்போது அதற்கு காரணமான இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் மகாபோதி கோவிலை தாக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தான் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான உபைத் உர் ரஹ்மானின் வீட்டில் கடந்த ஆண்டு ஒரு கூட்டம் நடந்துள்ளது. அப்போதே மகாபோதி கோவிலை தாக்கும் திட்டத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் துணை நிறுவனரான ரியாஸ் பத்கல் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் புத்தகயா குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications