தீவிரவாத தாக்குதல்: சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 8 நகரங்களுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள புத்தர் கோயிலில் நேற்று அதிகாலை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 5 பேர் படுகாயமடைந்தனர். நாடுமுழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சக்தி குறைந்த குண்டு வெடித்ததால் கோயிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் கொடுத்தாலும், இந்த குண்டுவெடிப்பிற்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, புனே, அகமதாபாத், டெல்லி போன்ற பகுதிகளிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என தேசிய புலனாய்வுத்துறை அமைப்பு எச்சரித்துள்ளது.
எனவே, இந்த நகரங்களில் உள்ள புத்த கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications