உ.பி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை: துணைவேந்தரை கைது செய்யக் கோரி மறியல்
அம்ரோகா: உத்தரபிரதேசத்தில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாணவி படித்து வந்த பல்கலைகழக துணைவேந்தர் மற்றும் அவரது மகனை கைது செய்யக்கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டதால், டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் ஐந்து மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சில தினங்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
தற்போது மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், கற்பழிப்பு தொடர்பாக மறியலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அம்மருத்துவ மாணவியின் கொலை மற்றும் கற்பழிப்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேஷ் ஜெயின் அவரது மகன் மணீஷ் ஜெயின் உள்பட 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆதலால் உடனடியாக அவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பிரச்சினையால்,டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்கலைக்கழக வளாக போலீசார் மாணவியின் கற்பழிப்பு மற்றும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளி யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications