குற்றாலத்தில் வெள்ளம்... அருவிகளில் கொட்டும் தண்ணீர்.... பயணிகள் ஏமாற்றம்
குற்றாலம்: குற்றால அருவிகளில் கொட்டி தீர்க்கும் தண்ணீரால் தொடர்ந்து குளிக்க தடை ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக விழுகிறது.
குற்றாலத்தில் சீசன் கடந்த மே 31ம் தேதி முதல் துவங்கியதிலிருந்து சாரல் மழையும் குளு குளு காற்றுமாய் வீசி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது.
கடந்த ஒருவார காலமாக வெயிலை காண முடியாத நிலையே காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

மெயின் அருவியில் வெள்ளம்
பிரதான அருவியில் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி பாலத்தை தொடும் அளவிற்கு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் பயணிகள் யாரும் அருவிக்கரை பக்கம் கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை.
சாரல் மழையோடு ஆக்ரோமாக அருவியும் கொட்டுவதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ஏமாற்றம்
இதனால் வெளியூர்களில் இருந்து அருவியில் குளிக்கலாம் என்று ஆசையோடு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சீசன் சூப்பராக இருக்கிறது என்று தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்து வந்தோம். ஆனால் அருவியில் குளிக்க திடீர் என்று தடை விதித்துவிட்டதாக பயணிகள் கூறினர்.

சாரல் மழையில் நனைந்து
அருவியில் தண்ணீர் குறையும் அப்போது குளிக்கலாம் என்று சாரல் மழையில் நனைந்தவாறு பயணிகள் காத்திருக்கின்றனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அருமையாக உள்ளதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

9 வது முறையாக
குற்றாலம், தென்காசி பகுதியில் கடந்த 15 தினங்களாக ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் சாரல் பெய்து வருவதுடன், சீசன் துவங்கிய இந்த 5 வார காலத்திற்குள் 9 முறை மெயினருவியில் குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் கொட்டியது.

ஐந்தருவியிலும் வெள்ளம்
மெயினருவி மட்டுமல்லாது ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குற்றாலத்திற்கு வந்த பயணிகள் கேரளா மாநிலம் ஆரியன்காவு பாலருவி நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications