கள்ள உறவு: மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவருக்கு 2 ஆண்டு சிறை
திருப்பூர்: வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு மனைவியை கொடுமை செய்த கணவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் முத்தணம்பாளை யத்தைச் சேர்ந்தவர் முத்துச்சரவணன் என்ற சரவணமூர்த்தி(வயது 41). இவர் அதே பகுதியில் பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா(31). முத்துச்சரவணனுக்கும், பிரேமலதாவுக்கும் திருமண மாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
திருமணத்தின் போது பிரேம லதாவின் பெற்றோர் 50 பவுன் நகை மற்றும் பாத்திர பண் டங்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில், முத்துச் சரவணனுக்கும், அவருடைய பேன்சி கடையில் வேலை பார்த்து வந்த கவிதா என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்படவே, கணவரை விட்டு பிரேமலதா பிரிந்து தனது தாய்விட்டுக்கு சென்று விட்டார்.
கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 நாட்கள் கணவன்-மனைவி இருவரும் தனியாக வீடு எடுத்து குடித் தனம் செய்து வந்தனர். ஆனால் அப்போதும் முத்து சரவணன் கவிதாவுடன் இருந்த தொடர்பை துண்டிக்கவில்லை. தட்டிக்கேட்ட மனைவி பிரேமலதாவை அடித்து கொடுமை படுத்தியதோடு கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். நகைகளை பறித்துக் கொண்டு விரட்டிவிட்டுவிட்டார்.
இதனையடுத்து பிரேமலதா நேராக திருப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் செய்தார். இந்த புகாரின் பேரின் வழக்குப் பதிவு செய்து முத்துசரவணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ராமசந்திரன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட முத்து சரவணனுக்கு 2 ஆண் டுகள் கடுங்காவல் தண்டனை யும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு உத் தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் முத்துசரவணன்.
கள்ள உறவினால் மனைவி, குழந்தைகளை பிரிந்ததோடு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் முத்துச் சரவணன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications