''போலீஸ்கார்.. லாரியைக் கொடுத்திட்டீங்க.. ஆனா டிரெய்லரை வித்துட்டீங்களே .??''
சென்னை: போலீஸார் பறிமுதல் செய்த லாரி மட்டும் இருக்கிறது. ஆனால் அதனுடன் இணைந்த டிரெய்லரைக் காணவில்லை. இதையடுத்து லாரிஉரிமையாளர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை ராயபுரம் டி.சதிஷ்குமார் தாக்கல் செய்துள்ள மனு:
சென்னை துறைமுகத்திலிருந்து பிற பகுதிகளுக்கு கண்டெய்னர் லாரி மூலம் சரக்குகளை எடுத்துச் செல்லும் தொழில் செய்து வருகிறேன். கடந்த மார்ச் 20-ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து சென்றுகொண்டிருந்த எனது லாரியை காசிமேடு அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஓட்டுநரிடம் வாகனம் தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளனர். எல்லா ஆவணங்களையும் காட்டிய பிறகும் கூட வாகனத்தை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.
அதன் பிறகு நானும் எனது சகோதரர் கார்த்திக்கும் எங்கள் லாரி மற்றும் டிரெய்லரை எடுத்து வருவதற்காக காவல் நிலையத்துக்குச் சென்றோம். ஆனால் அங்கு லாரி மட்டும் இருந்தது. அதனுடன் இணைந்திருந்த டிரெய்லரைக் காணவில்லை. இது குறித்து அங்கிருந்த காவல் துறையினரிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்ததோடு எங்களை மிரட்டியும் அனுப்பினர்.
பின்னர் நாங்கள் விசாரித்தபோது, லாரியிலிருந்து டிரெய்லரை மட்டும் தனியாக கழற்றி, காவல் துறையினர் விற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே எனது புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், எனது லாரியை டிரெய்லருடன் சேர்த்து என்னிடம் திருப்பி ஒப்படைக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஆர்.சுப்பையா, இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் மாநகர காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications