ஆ... அம்மா... பிரசவ வலியில் கத்தினால் அபராதம்: ஜிம்பாபே ஆஸ்பத்திரிகளின் அவலம்
லண்டன்: ஜிம்பாப்வேயில் பிரசவ வலியால் கத்தும் பெண்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் அபராதம் விதிக்கப் படுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ‘டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்' அமைப்பின் சமீபத்திய ஆய்வு.
உலக நாடுகளில் நிலவும் ஊழல் மற்றும் லஞ்சம் பற்றிய தகவல்களை சமீபத்தில் வெளியிட்டது டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்' என்ற அமைப்பு. இதில் இந்தியா ஊழலில் முதலிடத்தில் உள்ளதாக தகவல் தெரிவித்தது இவ்வமைப்பு.
தனிநபர் வருமானத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நாடு ஜிம்பாப்வே. இங்கும் லஞ்சம் தலை விரித்தாடுகிறதாம். அதிலும் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேரும் பெண்கள், பிரசவ வலியால் கத்தினால் கூட லஞ்சம் கேட்கப் படுகிறது என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

ஆஸ்பத்திரியில் லஞ்சம்....
போலீஸ் துறைக்கு அடுத்தபடியாக, ஜிம்பாபேயில் மருத்துவ துறையில் தான் லஞ்சம் அதிகமாக உள்ளதாக 68 சதவீத ஜிம்பாப்வே மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளதாம்.

பிரசவ அபராதம்...
ஜிம்பாபேயில், அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்கள் பிரசவ வலியால் துடித்து சத்தமிடும் போது, ஒவ்வொரு சத்தத்திர்கும் தனித் தனியாக அபராதமாம்.

ரூ 300 அபராதம்...
முதல் முறை கத்தினால், ரூ. 300 அபராதமாக விதிக்கப்படுகிறது. தொடரும் கதறல்களைக் கணக்கிட்டு அபராதம் வாங்குகுறார்களாம் மருத்துவமனை ஊழியர்கள்.

வட்டியும்... முதலும்...
அதிகபட்ச கொடுமையாக அபராத தொகையை கட்ட தவறிய பெண்கள், பிரசவத்திற்கு பிறகும் ஆஸ்பத்திரியிலேயே சிறை வைக்கப்படுகிறார்களாம். வட்டியுடன் சேர்த்து அபராதத்தை கட்டிய பின்னரே தாயையும், சேயையும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடியும் என நோயாளிகள் வேதனியுடன் கூறுவதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.











Click it and Unblock the Notifications