கருணாநிதியை விமர்சிக்கும் பரிதி இளம்வழுதியை அவரது மனசாட்சியே தண்டிக்கும்: மா.சுப்பிரமணியன்

திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக அரசின் 2 ஆண்டுகால மக்கள் விரோத போக்கை கண்டித்து சென்னை புரசைவாக்கத்தில் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,
திமுகவில் இருந்து வெளியே சென்ற ஒருவர் கலைஞரை தாத்தா, தாத்தா என்று கூறியிருக்கிறார். தாத்தா என்ற உறவு பெருமை வாய்ந்தது இல்லையா? வாரிசு அரசியல் என்று பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அவருக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுத்தபோது என் அப்பா எம்.எல்.சி.யாக இருக்கிறார் அதனால் எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டியது தானே?
மு.க. ஸ்டாலின் 84ம் ஆண்டு அல்ல 89ம் ஆண்டு தான் எம்.எல்.ஏ. ஆனார். 84, 89, 91, 96, 2001, 2006ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக இருந்துவிட்டு அமைச்சர் பதவியையும் வகித்துவிட்டு இந்த இயக்கத்தை பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?.
கைலாசபுரத்தில் கொட்டகை வீட்டில் இருந்தவர் தற்போது பாலவாக்கத்தில் தோட்ட வீட்டில் இருக்கிறார். இது யார் போட்ட பிச்சை? தன்னை வளர்த்து ஆளாக்கிய கலைஞரையும், தளபதியையும் விமர்சிக்க எப்படி நாக்கு வந்தது? திமுகவை குறைகூற அவருக்கு தகுதி இல்லை.
எம்.எல்.ஏ., அமைச்சர், துணை சபாநாயகர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு இந்த இயக்கத்தை விமர்சிக்க அவருக்கு எப்படி மனம் வந்தது? அவரது ஆதரவாளர்கள் அந்த இயக்கத்தில் இணைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். திமுகவில் ஒரு தொண்டனின் காலை கூட அவரால் தொட முடியாது.
அதிமுகவில் சேர்ந்தவர்களின் கதை இறுதியில் சோகத்தில் தான் போய் முடியும். பி.சேகர்பாபுவை அவர் கண்காணித்து வருகிறாராம். அவரது கால் தூசியைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது. இங்கு ஒருவனைத் தொட்டால் கூட திமுக தீப்பற்றி எரியும். தனி மனித ஒழுக்கமில்லாதவர் வரம்பு மீறி பேசக் கூடாது. இங்கிருந்து அங்கு சென்றவர்களின் நிலைமையை நாங்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். அவரின் பரிதாப நிலைமையையும் பார்க்கத் தான் போகிறோம்.
அவருக்கு பரிதி இளம்வழுதி என்று பெயர் வைத்தவர் கலைஞர். அவருக்கு சோறு போட்டது இந்த இயக்கம் தான். கலைஞரை விமர்சிக்கும் அவரை அவரது மனசாட்சியே தண்டிக்கும். திமுக என்னும் ஆலமரத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications