கல்யாண வீட்டில் கள்ள நோட்டைக் கொடுத்து சிக்கிய கும்பல்
திருக்கோவிலூர்: கல்யாண வீட்டுக்கு வந்த ஒரு கள்ள நோட்டுக் கும்பல், அங்கு மொய் எழுதுவது போல நடித்து 1000 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்று சிக்கியுள்ளது.
கள்ள நோட்டுக்காரர்கள் பல்வேறு வழிகளில் இப்போது கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்டு வருகின்றனர். ஏடிஎம்மில் கூட இப்போது கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் வருகின்றன.
இந்த நிலையில் கல்யாண வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் கள்ள நோட்டை மாற்ற முயன்று சிக்கியுள்ளது.
திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டியில் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அன்பளிப்பு வழங்கி கொண்டிருந்தனர்.
அப்போது திருமண மண்பத்துக்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் மொய் எழுதுபவர்களிடம் வந்தது. ரூ. 1000 நோட்டை கொடுத்த அவர்கள் 100 ரூபாய் மொய் எழுதுமாறு கூறியுள்ளனர். ஆனால் நூறு ரூபாய் மொய்க்காக ஆயிரம் ரூபாய்த் தாளை அவர்கள் எடுத்து நீட்டியதால் சந்தேகமடைந்த உறவினர்கள், அந்த நோட்டை பரிசோதித்துப் பார்த்தனர். அப்போதுதான் அது கள்ள நோட்டு என்று தெரி வந்தது.
இதைப் பார்த்த கள்ள நோட்டுக் கும்பல் தப்பி ஓட முயன்றது. ஆனால் 6 பேரை மடக்கிப் பிடித்து விட்டனர். ஒருவர் மட்டும் தப்பி விட்டார். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் வந்து 6 பேரையும் பிடித்துச் சென்றுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications