கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு: கறுப்புக் கொடி போராட்டம்…3 மாவட்ட மீனவர்கள் பங்கேற்பு

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின்உற்பத்திக்கன பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அணுஉலை எதிர்ப்பாளர்கள் நேற்று இடிந்தகரையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில், மீனவர்கள் அனைவரும் அணு மின் நிலைய பாதிப்பில் இருந்து தங்களை காக்க கோரி இறைவனை வேண்டினர். அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் உள்ள இடிந்தகரை, கூத்தங்குழி, கூடுதாழை, பெருமணல் உள்ளிட்ட 13 கடலோர கிராமங்களில் இன்று முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என முடிவெடுக்கப்பட்டது.
அணு மின் நிலையத்தை எதிர்க்கும் வகையில் மீனவ கிராமங்களில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று காலை முதலே மீனவகிராமங்களில் வீடுகள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் இன்று இடிந்தகரை வீதிகளில் அணு கசிவு ஏற்பட்டால் மனிதர்கள் எப்படி இறப்பார்கள் என்பதை விளக்கும் வகையில் மாலை 4 மணிக்கு மரணத்திரள் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications