நடிகை லீனாவின் காதலன் சுகாஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

சென்னையை அடுத்த சேலையூரில் ஜவுளிக்கடை வைத்துள்ள சக்கரவர்த்தி என்பவரிடம் கர்நாடக அரசிடம் சீருடை தைக்க அனுமதி வாங்கித் தருவதாக சுகாஷ் சந்திரசேகர் ரூ.54 லட்சம் பண மோசடி செய்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது இது போல பல பண மோசடிகளில் சுகாஷ் சந்திரசேகர் ஈடுபட்டது தெரியவந்தது. கனரா வங்கியில் கர்நாடக அரசின் பெயரைப் பயன்படுத்தி ரூ 19 கோடி மோசடியாகப் பெற்றுள்ளார்.
சுகாஷ் சந்திரசேகர் தலைமறைவான நிலையில் இந்த புகார்கள் தொடர்பாக அவரது காதலி நடிகை லீனா மரியபாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த சுகாஷ் சந்திரசேகரை டெல்லியில் கைது செய்த போலீசார் கடந்த 10-ந்தேதி தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
இதன் மீது நேற்று மாலை விசாரணை நடைபெற்றது. இதற்காக சுகாஷ் சந்திரசேகரை புழல் சிறையில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைத்து வந்தனர்.
போலீஸ் காவல் குறித்த மனுவை தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாண்டில்யன் விசாரித்தார். சுகாஷ் சந்திரசேகரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். வருகிற 19-ந்தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications