அண்ணனின் நண்பருடன் காதல்... காதலரின் தாய் எதிர்த்ததால் பெண் தற்கொலை
சேலம்: சேலத்தில் தனது அண்ணனின் நண்பரை இளம் பெண் ஒருவர் காதலித்தார். ஆனால் இந்தக் காதலுக்கு காதலரின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம், பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் 18 வயதான பிரியா. இவரும், இவரது அண்ணன் சதீஷின் நண்பர் மணிகண்டன் என்பவரும் காதலித்துள்ளனர்.
இந்த ரகசியக் காதல் மணிகண்டனின் தாயாருக்குத் தெரிய வந்துள்ளது. இந்தக் காதலை எதிர்த்துள்ளார். மேலும் சதீஷையும், அவரது குடும்பத்தினர், உறவினர்களையும் தனியாகப் போய்ச் சந்தித்து பிரியாவை கண்டிப்போடு வைத்திருங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் சதீஷ் வேதனை அடைந்தார். தனது தங்கை பிரியாவை அழைத்துக் கொண்டு வேறு வீட்டுக்குப் போய் விட்டார். ஆனால் மணிகண்டனின் தாயார் செய்த வேலையால் வேதனை அடைந்த பிரியா, வீட்டில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டு விட்டார். படுகாயத்துடன் அவரை ம்ருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து மணிகண்டன், தாயார் சித்ரா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்ராவைக் கைது செய்தனர். மணிகண்டன் தலைமறைவாகி விட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications