5வயது மகனை மூளையை சிதைத்து அடித்து கொடுமைப்படுத்திய தந்தை, சித்தி கைது
இடுக்கி: இரண்டாவது மனைவியோடு கூட்டு சேர்ந்து தனது முதல் தாரத்தின் மூலமாக பிறந்த மகனை கொடுமை செய்த தந்தை மற்றும் சித்தியை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனின் நிலைமை படு மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் செங்காராவைச் சேர்ந்த ஐஸ் வியாபாரியான ஷெரீப்க்கு ஏற்கனவே திருமணமாகி ஷபீன் (7), ஷபீக் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான அலீஷா (26) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார் ஷெரீப். அத்துடன், ஷெரீப் மூலமாக அலீஷாவுக்கு மற்றொரு குழந்தை பிறந்தது.
அதன் பின்னர், ஷபீனை அனாதை இல்லத்தில் சேர்த்த அலீஷா, வீட்டில் இருந்த ஷபீக்கை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கடுமையான காயங்களுடன் குமுளியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான் ஷபீக். பிறகு அச்சிறுவனை மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கட்டப்பனாவில் உள்ள செயின்ட் ஜான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஷபீக் சித்ரவதை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவன் கீழே விழுந்ததில் இவ்வாறு அடி பட்டதாக நாடகமாடிய ஷெரீப் மற்றும் அலீஷாவைக் கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்தனர் போலீசார்.
ஷபீக்கின் உடலில் தீக்காயங்கள் இருந்தன. கால் உடைந்திருந்தது. தலைக்காயம் காணப்பட்டது. உடல் முழுவதும் காயங்களும், நகக்கீறல்களும் இருந்தன. இதற்கிடையே, சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஷபீக்கின் உடல்நிலை நேற்று மிகவும் கவலைக்கிடமான நிலையை அடைந்தது. அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அவனது மூளைசேதமடைந்து உள்ளது. அடுத்தடுத்து 5 தடவை காக்காய் வலிப்பு ஏற்பட்டது. அவனது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.
பெரும் பரபரப்பை உண்டாக்கிய இக்கொடூர சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் பாதுகாப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கேரள அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சிறார்கள் இதுபோன்ற வன்கொடுமைகளிலிருந்து தப்பிக்க விரைவில் தனிச்சட்டம் உருவாக்கப் படும் என கேரள அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications