வக்பு வாரிய சொத்துக்களை மீட்க நடவடிக்கை: தலைவர் தமிழ்மகன் உசேன்!
சென்னை: பல கோடி மதிப்புள்ள வக்ப் வாரிய சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை உடனே மீட்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக கடந்த 10 ம் தேதி அன்று அ. தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள வக்ப் வாரிய அலுவலகத்தில் தமிழ் மகன் உசேன் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது, தமிழ்மகன்உசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

எனக்கு மீண்டும் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவர் பொறுப்பு கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் பல கோடி மதிப்புள்ள வக்ப் வாரிய சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை உடனே மீட்க உரிய நடவடிக்கை எடுப்பேன். இந்த பதவியில் இருக்கும் வரை முதல்வருக்கும், சமுதாயத்திற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பா.வளர்மதி, கே.டி.பச்சைமால், வி.மூர்த்தி, பி.வி.ரமணா, எஸ். அப்துல் ரஹீம் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், அரசு தலைமை ஹாஜி முப்தி முகமது சலாவூதின் அயூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications