செங்கோட்டை பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடல்... சுற்றுலா பயணிகள் தவிப்பு
செங்கோட்டை: பராமரிப்பு பணிகளுக்காக செங்கோட்டை பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தமிழக&கேரள எல்லையை இணைக்கும் முக்கியப் பகுதி நெல்லை மாவட்டம் செங்கோட்டை. இந்த ஊரின் வழியாகத்தான் கேரளாவில் இருந்து வரும் அனைத்துப் பேருந்துக்களும்மட்டுமின்றி கேரளப் பயணிகள் பெங்களூரு,புதுச்சேரி,திருப்பதி,உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துக்கள் புறப்படும் பிரதானபேருந்து நிலையமாக செங்கோட்டைபேருந்து நிலையம் விளங்கி வருகிறது.

தற்போது குற்றால சீசன் களை கட்டியுள்ளதால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறுப் பகுதிகளில் இருந்தும்,அண்டை மாநிலமான கேரளாவில் இருந் தும் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் செங்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். எல்லைப்பகுதியின் முக்கிய பேருந்து நிலையமாக இப்பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், கோட்ட யம், பெங்களூர், ஓசூர், மதுரை, வேளாங்கண்ணி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன. மேலும்
செங்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 16ம் தேதிமுதல் திடீ ரென எவ்வித முன்னறிவிப் பும் இன்றி பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மூடி யது. இதனால், கடந்த 3 நாட்களாக எந்த பேருந்த்துக்களும் பேருந்து நிலையத்திற்குள் வரவில்லை.
வெளியூர் செல்லும் பயணிகள்,பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள்,தற்போது சென்னையில் கவுன்சிலிங் நடைப்பெற்று வரும் நிலையில்சென்னை செல்ல முன் பதிவு செய்த மாணவ, மாணவிகள், பஸ்கள் எங்கு நிற்கிறது என்பது தெரியாமல் அங்கும், இங்குமாக அலைந்து ,அவதியடைந்து வருகின்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகளும், வியாபாரிகளும் நகர பஸ்கள் எப்பகுதியில் நிற்கிறது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். பஸ் நிலையம் மூடப்பட்டதால் வெளியூர் செல்லும் பயணிகளும் எங்கு பஸ் ஏறுவது என தெரியாமல் சாலையோரங்களில் நின்று தவித்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் சாரல் மழை பெய்துவருவ தால், பயணிகள் மழையில் நனைந்தும், மழைக்கு ஒதுங்க இடமில்லாமலும் திண்டாடிவருகின்றனர்.

ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலைய வளாகத்திற்குள் ரோடு உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக பேருந்து நிலையம் ஒரு மாதம் வரை மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் இதே நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பராமரிப்பு பணிக்கென்று பேருந்து நிலையம் மூடப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி செங் கோட்டை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் கூறும் போது, ‘தொடர்ந்து 5 நாட்கள் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பஸ்நிலையம் மூடப்பட்டுள்ளது. பஸ்களும், பயணிகளும் நிலையத்திற்குள் வந்து சென்றால் பராமரிப்பு பணிகள் மிக தாமதமாகும் என்பதால் பஸ் நிலையத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து அலுவலகங்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். பேருந்துக்களை இயக்கம் பணிமனைகளுக்கு தகவல்தெரிவித்த நிர்வாகம் பயணிகளுக்கு தெரிவிக்காமல் விட்டது ஏனோ ...?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications