'பொற்கால ஆட்சி' விளம்பரங்கள்… இனி செய்ய முடியாது… தடை விதிக்க ஆலோசிக்கிறது சட்டக் கமிஷன்!
டெல்லி: ஆட்சிக் காலம் முடியும் நிலையில் உள்ள மத்திய, மாநில அரசுகள், தங்களது ஆட்சியின் கடந்த கால சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து சட்டக் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இது ஆள்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியிலோ, மாநிலத்திலோ ஆள்பவர்கள் ஆட்சி முடிவடையும் தருவாயில் தங்களின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விளம்பரம் செய்வார்கள்.
நாடு ஒளிர்கிறது என்றும், தங்களுடைய ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்றும் தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்வார்கள். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணம் வீணாவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது சட்டக்கமிஷன்.
சட்டக்கமிஷனின் இந்த திடீர் முடிவு காரணமாக காங்கிரஸ் கட்சிதான்அதிகம் அதிர்ச்சியடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது ஆட்சியின் சாதனைகளை சுமார் 630 கோடி ரூபாய் மதிப்பில் விளம்பரப்படுத்த திட்டமிட்டிருந்தது.
அதேப்போன்று நவம்பர் மாதம் சட்டசபை பதவிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ள சில மாநிலங்களில், ஆட்சி நடத்தும் கட்சிகள் பலகோடி செலவில் விளம்பரம் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில் அந்த மாநில அரசுகளும் அதிர்ச்சியடைந்துள்ளன.
இதனிடையே டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தனது ஆட்சி கால சாதனைகளை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரப்படுத்தி வரும் நிலையில், பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக கூறி, ஷீலா தீட்சித்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுமாறு பாரதீயஜனதா கட்சி நீதிமன்றத்தை அணுகி உள்ளது.
இருப்பினும் அனைத்துக்கட்சிகளும் இது தொடர்பான தங்களது கருத்துக்களை ஜூலை 31 க்குள் தெரிவிக்க வேண்டும் என அது கேட்டுக்கொண்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications