பொது சொத்துக்களுக்கு சேதம்: பாமக மீதான 142 வழக்குகள்.. டாக்டர் ராமதாஸ் நாளை ஆஜராவரா?

ஏப்ரல் மாதம் சித்திரைப் பெருவிழாவைத் தொடர்ந்து மரக்காணத்தில் இருவேறு பிரிவினரிடையே வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸ் நடவடிக்கையை கண்டித்து விழுப்புரத்தில் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டம் செய்தார். தடையை மீறி போராட்டம் நடத்திய அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வடமாவட்டங்களில் பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் மரங்கள் வெட்டப்பட்டன. பேருந்து கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன.
இதையடுத்து தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992-ன் படி இழப்பீட்டு தொகையை பாமகவிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. இதன்படி வருவாய்துறை நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் சிவில் நீதிபதியாக இருந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த 1-ம் தேதியும், 2-ம் தேதியும் 80 வழக்குகள் தொடர்பாக விசாரித்தார். இந்த வழக்கு 30-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், விழுப்புரம், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக 142 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் மீதான 3 நாள் விசாரணை நாளை (செவ்வாய்) தொடங்குகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜர் ஆகுமாறு டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இருதய அறுவை சிகிச்சை செய்து ஓய்வு பெற்று வரும் டாக்டர் ராமதாஸ் நாளை ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications