மலேசியா: ரம்ஜான் நோன்பு எதிரொலி: மாணவர்களை குளியலறையில் சாப்பிட உத்தரவிட்ட பள்ளி
கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு பள்ளி நிர்வாகம், தற்போது ரம்ஜான் நோன்புக் காலம் என்பதால் முஸ்லீம் அல்லாத மாணவர்களை பள்ளியின் குளியலறையில் சாப்பிட உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுங்காய் புலோ என்ற இத்தில் உள்ள செரி பிரஸ்தினா பள்ளியில்தான் இது நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நாட்டு கல்வித்துறை அமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.
மாணவ, மாணவியர் பள்ளிக்கூட குளியலறையில் உட்கார்ந்து சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் இணையதளங்களிலும், பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றிலும் வெளியாகியுள்ளது.

ரம்ஜான் மாதம் என்பதால், நோன்பு இருக்கும் முஸ்லீம் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதால் இவ்வாறு குளியலறையில் உட்கார்ந்து சாப்பிடுமாறு முஸ்லீம் அல்லாத மாணவ மாணவியரை பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கல்வித்துறை அமைச்சர் கமலநாதன், இது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றார்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications