இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட இருவர் யார்..? தகவல் தந்தால் ரூ. 5 லட்சம் பரிசு!

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் அகமதாபாத்துக்கு அருகே குஜராத் மாநில போலீஸாரால் 2004ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் தீவிரவாதிகள், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் திட்டத்துடன் ஊடுறுவினர். எனவேதான் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்பது குஜராத் காவல்துறையின் வாதமாகும்.
ஆனால் இது போலி என்கவுண்டர் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. கொல்லப்பட்ட அனைவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகவும் சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜஹானுடன் கொல்லப்பட்ட அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஸன் ஜோஹர் ஆகியோரது உண்மையான அடையாளங்களை அறியும் முயற்சியில் சிபிஐ இறங்கியுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ, ஜம்மு காஷ்மீர் மாநில செய்தித் தாள்களில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதில், இந்த இருவரும் உண்மையில் யார், இவர்கள் குறித்த உண்மையான அடையாளம் என்ன, இவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று குஜராத் காவல்துறை சொல்வது உண்மையா, உண்மையிலேயே இவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களா.. இதுகுறித்த உண்மையான தகவல்களைக் கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்தப் படுகொலைகள் நடந்து 9 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தான் தனது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த குற்றப்பத்திரிக்கையில் 7 போலீஸார் மீது கொலை, சதி, சாட்சியங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ப்பட்டுள்ளது. இந்த போலீஸாரில் மூ்த்த குற்றப் பிரிவு அதிகாரி வன்சாரா, முன்னாள் இணை போலீஸ் கமிஷனர் பி.பி.பாண்டே ஆகியோரும் அடங்குவர். இதில் பாண்டே இன்னும் தலைமறைவாக இருக்கிறார். வன்சாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications