முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு காலமானார்!

லக்னோவில் பிறந்த அருண் நேரு, நேரு குடும்பத்து உறவினராவார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது மிக முக்கிய நபராக இருந்தார். ராஜிவ் அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
அருண்நேருவின் ஆலோசனையின் பேரில் 1984ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோரை ராஜிவ் களமிறக்கினார். இருப்பினும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வி.பி.சிங்., ராஜிவ் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போது அருண் நேருவும் விலகினார். வி.பி.சிங் முதலில் உருவாக்கிய ஜன் மோர்ச்சாவில் அருண் நேரு ஐக்கியமானார். பின்னர் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள் அரசு அமைவதிலும் அருண் நேரு முக்கிய பங்கு வகித்தார்.
பின்னர் தீவிர அரசியலில் இருந்து சற்றே விலகி இருந்தாலும் ஊடகங்களில் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார் அருண் நேரு. கடந்த சில வாரங்களாக அவர் உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகள் பிரியங்கா ஆகியோர் அண்மையில் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்திருந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அருண்நேரு மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications