உ.பி.யில் காலைக்கடனை கழிக்கச் சென்ற பெண் 6 பேரால் கற்பழிப்பு
Subscribe to Oneindia Tamil
காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் காலைக்கடனை கழிக்கச் சென்ற பெண் 6 பேரால் கற்பழிக்கப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முராத்நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் காலைக்கடனை கழிக்க தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் 6 பேரால் கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தாலும் அப்பெண் நேற்று தான் முராத்நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 6 பேரில் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications