காதல் திருமணம் செய்த ஊராட்சி தலைவி எஸ்.பி ஆபிசில் தஞ்சம்
விழுப்புரம்: காதல் திருமணம் செய்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவியும், அவரது கணவரும், உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி விழுப்புரம் எஸ்.பி.யிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்களம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி. வயது 23. இவர் பள்ளிப்புதுப்பட்டு கிராம ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.
கனிமொழியும் அதே கிராமத்தை சேர்ந்த வேல்முருகனும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு கனிமொழியின் பெற்றோர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு இருந்தது. இதையடுத்து கனிமொழி தனது காதலருடன் கடந்த 13ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி மைலம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கனிமொழியின் தந்தை, தன் மகளை வேல்முருகன் கடத்தி சென்றுவிட்டதாக கண்டமங்களம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, கண்டமங்களம் போலீசார் வேல்முருகனை தேடி கிடைக்காததால், அவரின் உறவினர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
காதலர்கள் ஊருக்கு திரும்பி வந்தால் அவர்களை கொலை செய்துவிடுவேன் என்று கனிமொழியின் தந்தை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி காதல் ஜோடியினர் விழுப்புரம் எஸ்.பி.டம் தஞ்சம் அடைந்துள்ளனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவியே பாதுகாப்பு கேட்டு எஸ்.பியிடம் தஞ்சம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications