நிரம்பும் மேட்டூர் அணை: ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்… 6வது நாளாக தடை

பருவ மழை தீவிரமாக பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது.
கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து 85 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பிவருகிறது. தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 86 அடியாக உயர்ந்துள்ளது. நாளை இரவுக்குள் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணை திறப்பு எப்போது?
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பாசனத்திற்காக விரைவில் தண்ணீர் திறக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணை திறக்கப்பட்டால் காவிரியில் நீர் பெருக்கெடுப்பதோடு இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு பண்டிகை அமர்களமாக இருக்கும் என்பது டெல்டா மாவட்ட மக்களின் நம்பிக்கையாகும்.
ஒகேனக்கல்லில் 6 வது நாளாக தடை
கபினி, கேஆர்எஸ் அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் இன்று காலை 7 மணிக்கு பிலிகுண்டுலுவுக்கு வந்தடைந்தது. காலை 8 மணிக்கு ஒகேனக்கல் வந்தது. காலை 8.30 நிலவரப்படி, வினாடிக்கு 51,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து 51 ஆயிரம் கன அடியை தாண்டியுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயின் அருவி, சினிபால்சை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் 6வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி மறுகரையில் வசிக்கும் மக்களும், மாணவர்களும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மாமரத்து கடவு பரிசல் துறை, கோத்திக்கல் பரிசல் துறை, ஆலம்பாடி பரிசல் துறை ஆகியவை மூடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளும், பரிசல் ஓட்டிகளும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications