அமைச்சர் வைகைச் செல்வன் பங்கேற்ற அரசு விழாவில் ரகளை… கூச்சல் குழப்பம்
திருப்புவனம்: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் பங்கேற்ற அரசு விழாவில் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்படாததை கண்டித்து அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
30.54 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை பள்ளி கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச் செல்வன் திறந்து வைத்தார். விழாவிற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தெய்வநாயகம் தலைமை வகித்தார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராஜா ராமன், எம்.எல்.ஏ குணசேகரன், பிற்பட்டோர் நலவாரியத் தலைவர் செந்தில்நாதன், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
விழாவில் கல்வெட்டு திறக்கும் போதே அதிமுக வினர் முதல்வர் ஜெயலலிதா படம் இல்லை என்று கூறி தகராறு செய்தனர். காரில் ஏறப்போன அமைச்சர் மீண்டும் திரும்பி வந்து அமைச்சரிடம் விளக்கம் கேட்டார். அப்போது அதிமுகவினர் மீண்டும் ரகளையில் ஈடுபட்டனர்.
கூச்சலும் குழப்பமுமாக விழா நடைபெற்ற இடம் மாறியது.

அதிமுகவினரை அமைதியாக இருக்குமாறு முன்னாள் எம்.எல்.ஏ உமா தேவன் கேட்டுக் கொண்டார் ஆனாலும் அமைதி ஏற்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்படும் என்று கூறியதோடு படத்தை எடுத்துக் கொண்டு வைத்தார். இதனையடுத்து விழா தொடர்ந்து நடைபெற்றது.
கூச்சல் குழப்பம் காரணமாக அரசு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் எதுவும் பாடப்படாமலேயே முடிந்தது. இதனை கலெக்டர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலரும் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications