சென்னை-பெங்களூர் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது... 83 பயணிகள் தப்பினர்

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து பெங்களூர் வழியாக திருவனந்தபுரத்திற்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் காலை 7 மணிக்கு புறப்பட்டது.
விமானம் ஓடுபாதை நோக்கி சென்றபோது பின்பக்க டயர் திடீரென வெடித்தது. விமானத்தின் பின்பக்க டயர் வெடித்ததை விமானி கண்டுபிடித்தார். இது பற்றி விமான நிறுவன அதிகாரிகளும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தந்தார். பின்னர் தள்ளு வாகனங்கள் மூலமாக விமானம் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
விமானத்தில் பழுதடைந்த டயரை மாற்றும் பணியில் பொறியாளர் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இதில் 83 பயணிகளும், 6 விமான சிப்பந்திகளும் இருந்தனர். டயரை மாற்றிய பிறகு விமானம் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.
பயணிகளை கீழே இறக்காமல் விமானத்திலேயே தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான டீ, காபி வழங்கப்பட்டது. விமானத்தில் டயர் வெடித்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரத்திலும்
இதேபோல் திருவனந்தபுரம் விமானநிலையத்திலும் மலேசியாவிற்கு புறப்பட்ட விமானத்தின் டயர் வெடித்தது. இதில் 43 பயணிகள் உயிர் தப்பினர். இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து திருவனந்தபுரத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 3 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications