ஒருவரை ஒதுக்கி விட்டு இன்னொருவருடன் சந்தோஷம்... காதலியைக் கொன்றார் காதலர்!
சென்னை: தான் காதலித்து வந்த நபரை ஒதுக்கி விட்டு இன்னொருவருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு அவருடன் சந்தோஷமாக இருந்த பெண்ணை கொன்றார் காதலர். பின்னர் உடலைத் தூக்கி கூவம் ஆற்றில் போட்டு விட்டுப் போய் விட்டார். தற்போது அந்தக் காதலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சூளைமேடு பகுதியில் உள்ள கூவத்தில் ஒரு இளம் பெண்ணின் உடல் மிதந்து வந்தது. இதையடுத்து அந்த உடலைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணையை முடுக்கி விட்னர். விசாரணையில் அந்தப் பெண் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இந்த நிலையில் போலீஸாருக்கு ஒரு போன்வந்தது. அதில் பேசிய நபர், நீங்கள் கண்டுபிடித்துள்ள உடலுக்குச் சொந்தக்காரர் நீலாவதி. அவரை நான்தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். மேற்கொண்டு விவரம் தெரிவிக்கவில்லை. போனை வைத்து விட்டார். இதையடுத்து அந்த எண்ணிலிருந்து பேசிய நபரை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரது பெயர் அருண், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.
ஆனால் அருண் அவரது வீட்டில் இல்லை. பென்னாடத்தில் இருந்தார். இதையடுத்து தனிப்படை போலீஸார் விரைந்து சென்று அருணை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
நீலாவதி பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர். அவரும்,அருணும் காதலித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் அருணைத் தீவிரமாக காதலித்துள்ளார் நீலாவதி. ஆனால் நாளடைவில் அருணை ஒதுக்க ஆரம்பித்து விட்டார். இதனால் குழப்பமடைந்த அருண், ரகசியமாக விசாரித்தபோதுதான் நீலாவதி, புதிய நபரைப் பிடித்தது தெரிய வந்தது. அந்த நபருடன் ஏற்பட்ட மோகத்தில், பழைய காதலரை ஒதுக்கியுள்ளார் நீலாவதி.
இது தெரிய வந்து கோபமடைந்தார் அருண். நீலாவதியை கல்லால் தலையில் அடித்துக் கொலை செய்து விட்டு கூவத்தில் வீசி விட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications