தெலுங்கானா செழுமையுடன் சிறக்க வாழ்த்துக்கள்: சீமான்
சென்னை: தெலுங்கானா செழுமையுடன் சிறக்க வாழ்த்துக்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோபித்த கோரிக்கை ஏற்று தனி மாநிலமாக உருவாக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும்.
1956 ல் மொழி வழி இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களின் மொழி, இன அடையாளங்கள், பண்பாடு ஆகியன காப்பாற்றப்பட வேண்டும், அம்மாநிலத்திற்குட்பட்ட பகுதிகள் பொருளாதார மேம்பாடு பெற தனி மாநில அமைப்பு அவசியம் என்கிற அடிப்படையில்தான் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
ஆந்திரத்தைப் பொறுத்தவரை, விசால ஆந்திரா என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய தெலுங்கானா போராட்டமே ஆந்திரா என்கிற மாநிலம் அமையக் காரணமானது. ஆனால், கனிம, நீர் வளங்கள் கொண்டிருந்த தங்களுடைய பகுதி ஆந்திர ஆட்சி, அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருவதால், ஆந்திரத்தின் வறுமைப் பகுதியாக தெலுங்கானா இருப்பதாக கூறியே, தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் நடந்தது.
இந்தியாவிலுள்ள பொருளாதார ரீதியில் பிற்பட்ட பகுதிகளை பற்றி ஆய்வு செய்த மத்திய அரசுக் குழு, 2009-10ஆம் ஆண்டுகளில் அளித்த அறிக்கையின்படி, ஆந்திரத்தின் 13 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக இருந்தது. அதில் பத்து மாவட்டங்கள் தெலுங்கானா பகுதிக்கு உட்பட்டவையாகும்.
அந்த அடிப்படையில்தான் ஹைதராபாத், அடிலாபாத், மேடக், கம்மம், கரீம் நகர், மெஹபூப் நகர், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் ஆகிய 10 மாவட்டங்களும் சேர்ந்த தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
தெலுங்கானா தவிர்த்த ஆந்திர மாநிலத்திற்கு புதிதாக ஒரு தலைநகர் உருவாக்கப்படும்வரை ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்குமான பொதுத் தலைநகராக்க செய்யப்பட்டிருக்கும் முடிவும் வரவேற்கத்தக்கதே. தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்பது ஏற்கப்பட்டிருப்பது, ஆந்திராவின் இதர பகுதி மக்களுக்கு ஒரு ஏமாற்றமானதுதான் என்றாலும், ஹைதராபாத் தெலுங்கானாவின் மையப்பகுதியில் உள்ளதால், ஆந்திரத்திற்கென்று ஒரு தனித்த தலைநகர் உருவாக்கப்படுவதே நல்லதாகும்.
தெலுங்கானா உருவாக்கத்தை எதிர்க்கும் ஆந்திர அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை கைவிட்டு, தெலுங்கானாவுடன் சகோதர மனப்பாங்குடன் எப்போதும் போல் செயல்பட வேண்டும். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கான நியாயம் எப்போதோ ஏற்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் பல உயிர்களைக் குடித்துவிட்டது.
இதற்குமேலும் அந்த நிலை தொடர ஆந்திர, தெலுங்கானா மக்களும் அரசியல் கட்சிகளும் அனுமதிக்காமல், வெவேறு மாநிலத்தில் இருந்தாலும் ஒரே தேசிய இனம் என்ற ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
ஹிட்லர் உத்வேகம்... வடக்கிற்கு எதிரான போர்க்கொடி! தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சால் புயல் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications