அக்டோபரில் ரயில் கட்டணம் மீண்டும் உயர்வு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அக்டோபர் மாதத்தில் ரயில் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் அல்லாத கட்சிகளை சேர்ந்தவர்கள் ரயில்வே அமைச்சர்களாக பதவி வகித்து வந்த கடந்த 10 ஆண்டு காலத்தில் ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.நீண்ட காலமாக ரெயில் கட்டணம் உயர்த்தப்படாததால், பயணிகள் கட்டண மானியம் காரணமாக இந்த பிரிவில் ரயில்வே துறைக்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டு வந்தது.

Rail

கடந்த 2004-2005ஆம் ஆண்டில் ரூ6,159 கோடியாக இருந்த இழப்பு, நடப்பு நிதியாண்டில் 4 மடங்கு அதிகரித்து ரூ.25 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தவிர்ப்பதற்காக, இனி நிலைமைக்கு ஏற்ப ரயில் கட்டணத்தை சீரமைப்பது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ரயில் கட்டணத்தை முடிவு செய்வதற்காக, ரயில் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் என்ற சுதந்திரமான அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இதனிடையே வரும் அக்டோபர் மாதத்தில் ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ரயில்வே அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+