மும்பை: நீச்சல் பயிற்சியின் போது பக்கவாதம் தாக்கியதால் நீரில் மூழ்கி பலியான முதியவர்
மும்பை: நீச்சல் பயிற்சி மேற்கொண்ட போது பக்கவாதம் தாக்கியதால், கரையேற இயலாமல் 52 வயது முதியவர் ஒருவர் மும்பையில் பரிதாபமாகப் பலியானார்.
மும்பையில் வசித்து வந்த 52 வயது நாராயண் டிக்-ற்கு காலையில் வாக்கிங் செல்வது வழக்கமாம். நேற்றும் வழக்கம்போல் வாக்கிங் புறப்பட்ட அவருடன், அவரது 13 வயது மகன் ஓம்கார் சென்றுள்ளான். வாக்கிங் செல்லும் வழியில் குளமொன்றைக் கண்ட நாராயண் அதில் இறங்கி நீச்சல் அடிக்க திட்டமிட்டுள்ளார்.
தண்ணீருக்குள் இறங்கி நீந்தத் துவங்கிய நாராயண் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓம்கார், நீச்சல் தெரியாத காரணத்தால் மற்றவர்கள் உதவி வேண்டி சத்தமிட்டுள்ளான்.
ஆனால், மீட்புப் படையினர் வந்து, நாராயணனின் உடலை மட்டிமே மீட்க முடிந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்ட நாராயண் உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. அதில், இறப்பதற்கு முன் நாராயண் பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டது தெரிய வந்தது. அதனாலேயே அவர் மேற்கொண்டு நீந்த முடியாமல் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என போலீஸ் தரப்பில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications