அம்மா, ரொம்ப நன்றி அம்மா: காவேரி வெள்ளத்தில் சிக்கி காப்பாற்றப்பட்ட 4 பேர் ஜெ.வுக்கு நன்றி

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடந்த சில நாட்களாக காவேரி நீர்பிடிப்புப் பகுதியில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, கர்நாடக அணைகளிலிருந்து அதிகளவில் நீர் திறந்து விடப்படுகிறது.
எனவே, ஒகேனக்கல் நீர் அருவிப் பகுதியில் குளிக்கத் தடை விதித்ததுடன் அந்தப் பகுதியை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது. தாழ்வான பகுதியிலிருந்து மக்களும் மேடான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் 4.8.2013 அன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் மாதப்பன் ஓகேனக்கல் பகுதியில் காவேரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் மரக்கிளையில் தொற்றிக் கொண்டார்.
இதனை அறிந்தவுடன், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை உதவியுடன் மாதப்பனைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையில், தன்னிச்சையாக இவரைக் காப்பாற்ற ஊட்டமலையைச் சேர்ந்த பரிசல் ஓட்டிகள் மாதவன் என்பவரின் மகன் ராமகிருஷ்ணன், கோவிந்தன் என்பவரின் மகன் முத்து, ராமசாமி என்பவரின் மகன் சகாதேவன் ஆகியோர் ஒரு பரிசலில் சென்றனர்.
இருப்பினும், வெள்ளப் பெருக்கில் பரிசலை இயக்க முடியாமல் ஆற்றின் குறுக்கே உள்ள தீவு போன்ற மேடான பாறை மற்றும் மரங்களுக்கு இடையில் இந்த மூவரும் ஒதுங்கினர்.
இந்தச் செய்தியை அறிந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் பணிக்குழு உதவியுடனும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலமும் நால்வரையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இவர்களை மீட்பதற்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் பணிக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அக்குழுவை சேர்ந்த 47 நபர்கள் 4.8.2013 நள்ளிரவில் சம்பவ இடத்தை வந்தடைந்தனர். அந்த சமயத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால், மீட்புப் பணியில் சிக்கல் நீடித்தது.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி கோயம்புத்தூர் மாவட்டம், சூலூரிலிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதன் விளைவாக, ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாதப்பன், பரிசல் ஓட்டிகள் ராமகிருஷ்ணன், முத்து, சகாதேவன் ஆகிய நால்வரும் இன்று (5.8.2013) காலை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் மீட்கப்பட்டனர். இவர்கள் நால்வரும் மருத்துவ சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
காவேரி வெள்ளப் பெருக்கில் சிக்கிய தங்களைக் காப்பாற்ற அதி விரைவாக நடவடிக்கை எடுத்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உயிர் பிழைத்த நால்வரும், அவர்தம் உறவினர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications