'டாக்' தொழிற்சாலையை அரசு ஏற்கக் கோரி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
தூத்துக்குடி: தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை தமிழக அரசே ஏற்று நடத்தக்கோரி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி ஸ்பிக் உர தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனமாக தூத்துக்குடி அல்கலி கெமிக்கல்ஸ் பெர்ட்டிலைசர்ஸ் (டாக்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சோப்பு, கண்ணாடி தயாரிப்பிற்கான சோடாஸ் கெமிக்கல், அமோனியம் குளோரைடு உரம் ஆகியவை உப்பை மூலதனமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.
டாக் தொழிற்சாலை இயக்குவதற்கு ஸ்பிக் தொழிற்சாலையிலுள்ள யூரியா பிளாண்ட் இயக்குவது கட்டாயமாகும். ஆனால் ஸ்பிக் நிறுவனம் யூரியா பிளாண்டில் உற்பத்தியை நிறுத்தி வைத்து, டாக் தொழிற்சாலையின் உற்பத்தியையும் நிறுத்தி வைத்துள்ளதை தொடர்ந்து ஆலை மூடப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில் டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்தவேண்டும், தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாக் தொழிலாளர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு துவங்கிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு டாக் தொழிலாளர்கள் சங்க தலைவர் துரையரசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் துரை முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாநில செயலாளர் காசிவிஸ்வநாதன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
இதில், டாக் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், சர்வகட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications