‘ஆம்லெட்’ போட வெங்காயம் நறுக்க மறுத்த மனைவியை கொன்ற கணவன்
புனே: புனேயில், ஆம்லெட் போட வெங்காயம் நறுக்க மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப் பட்டுள்ளான்.
வீட்டுச் சண்டை விபரீதத்தில் கொண்டு போய் விட்டதற்கு இச்சம்பவமே மிகப் பெரிய உதாரணம். புனே அருகில் உள்ள, தஹெர்கான் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் 31 வயதாகும் சுபாஷ் குமார். இவருக்கு மணமாகி விட்டது.
சம்பவத்தன்று, ஆம்லெட் கேட்டுள்ளார் சுபாஷ். ஆனால், அவரது மனைவியோ ஆம்லெட்டிற்கு வெங்காயம் நறுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது.
கோபத்தில் வெங்காயம் நறுக்கித் தர மறுத்த மனைவியை கொலை செய்து விட்டார் சுபாஷ். தகவல் அறிந்து வந்த போலீசார், சுபாஷை கைது செய்தனர். அவரது மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அல்ப காரணாங்களுக்காக போடப் படும் குடும்ப சண்டைகள் சில நேரங்களில் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது.












Click it and Unblock the Notifications