உணவுப் பொருள் பெயரில் தென்கொரியாவிலிருந்து வந்த ரூ. 1 கோடி மதுபானம் பறிமுதல்
தூத்துக்குடி: போலியான உணவுப்பொருள் பெயரில் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியான ஒருகோடி ரூபாய் மதிப்பிலான தென்கொரிய மதுபான பாட்டில்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சரக்குகள் இறக்குமதியாகிறது. இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கப்பலில் தென்கொரியாவில் இருந்து பெப்பர் பேஸ்ட் என்ற பெயரில் உணவுப் பொருட்கள் இறக்குமதியானது.
இந்த கன்டெய்னரை தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். சோதனையின்போது கண்டெய்னரில் இருந்த 1410 அட்டை பெட்டிகளில் 800 பெட்டிகளில் தென்கொரியா நாட்டின் ஜோஜூ வகை மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 800 அட்டைபெட்டிகளில் இருந்த உயர் ரக மதுபான பாட்டில்களான 32ஆயிரம் மது பாட்டில்களையும் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். 360 மில்லி அளவு கொண்ட இந்த மதுபாட்டில்களின் சர்வதேச மதிப்பு ஒருகோடி ரூபாயாகும். இதில் தொடர்புடைய இறக்குமதியாளர்கள் இருவரை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த தகவலை தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications