உடற்கூறு பகிரங்கம்… ஆதார் அட்டைக்கு தடை கோரிய வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி: ஆதார் அடையாள அட்டை வழங்க தடை விதிக்க கோரி தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் அளிக்கும் படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமும், மனித உரிமை ஆர்வலர் இந்து பிரகாஷ் என்பவரும் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆதார் அடையாள அட்டையில் தனி நபர் உடற்கூறு அடையாளங்கள் பகீரங்கப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆதார் அடையாள அட்டைக்காக இதுவரை சேரிக்கப்பட்ட தனிநபர் விவரங்களை அழிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
ஆதார் அடையாள அட்டைக்கு சட்டபூர்வ அந்தஸ்து இல்லாததால் ஏழைகளுக்கு அரசு உதவி கிடைக்காமல் போகும் நிலை உள்ளது என்றும் இதனால் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை மாநில அரசுகள் பின்னுக்கு தள்ளியுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பாக நவம்பர் 6ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications