இந்தியாவின் முதல் ‘தாய்ப்பால் வங்கி’ கொல்கத்தாவில் தொடக்கம்
கொல்கத்தா: இந்தியாவின் முதல் தாய்ப்பால் வங்கியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று கொல்கத்தாவில் தொடக்கி வைத்தார்.
பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திரனையும்,ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லது தாய்ப்பால். இரண்டு வயது வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமானதாக வளரும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், பல்வேறு காரணங்களால், பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை. அத்தகைய குழந்தைகளுக்கு உதவிடும் வகையில் வெளிநாடுகளில் தாய்ப்பால் வங்கிகள் உள்ளன. ஆனால், இதுவரை அத்தகைய வங்கிகள் எதுவும் இந்தியாவில் இல்லை. இக்குறையினைப் போக்கிடும் வகையில், மேர்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் தாய்ப்பால் வங்கியினைத் திறந்து வைத்தார்.
இரத்த வங்கிகளைப் போன்று, தாய்ப்பால் தானம் பெறப்பட்டு சேமித்து வைக்கப் படும். பின்னர் தேவைப்படும் குழந்தைகளுக்கு அவை பகிர்ந்தளிக்கப் படும் என மம்தா தெரிவித்துள்ளார்.
மேலும், ‘பிறந்த ஒரு குழந்தையின் அடிப்படைத் தேவையை இந்த புதுமையான திட்டம் நிறைவேற்றி வைக்கும். மிகுந்த கவனத்துடன் அதிநவீன வசதிகளுடன் இந்த தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. எனவே இதில் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இல்லை. தாய்ப்பால் பெற முடியாத குழந்தைகளுக்கு இங்கு தாய்ப்பால் கிடைக்கும்' எனத் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் முதல் வாரம் சர்வதேச அளவில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப் படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications