அடையாறு ஆற்றில் குதித்து சாப்ட்வேர் எஞ்ஜினியர் தற்கொலை? உடலை கண்டுபிடிக்க முடியாமல் குழப்பம்

கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சுபாஷ் சுப்ரமணியன் கணிணிப் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் நேற்று மாலை 3 மணியளவில் தனது குடும்பத்தினருக்கு போன் செய்துள்ளார். அப்போது கோட்டூர்புரம் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.
உடனடியாக அங்கு வந்த அவரது உறவினர்கள் சுபாஷின் செருப்பு, பைக் ஆகியவை மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தும் தற்கொலை செய்து கொண்டவரின் உடல் மீட்கப்படவில்லை. ஆனால் செல்போன் மட்டும் தொடர்பிலேயே இருந்தது. இதனால் போலீசார், சுபாஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வீட்டை விட்டு வேறு எங்கேனும் சென்றுவிட்டாரா என்று தேடி வருகின்றனர்.
அவரது செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் அது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சுபாஷின் செல்போன் இதுவரை சுவிட்ஆப் செய்யப்படவில்லை. அவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதை யாரும் பார்த்ததாக இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை எனவே திங்கட்கிழமை காலையிலும் போலீசார் சடலத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளனர். சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் சுபாஷின் தந்தை மரணமடைந்து விட்டார். அதிலிருந்தே மனமுடைந்து காணப்பட்ட சுபாஷ் இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இதே பாலத்தில் இருந்து குதித்து பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை செய்து கொண்டார். கடந்த வாரம் குழந்தை தள்ளிவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications