சொத்துக் குவிப்பு வழக்கு- திமுக மனுவை நிராகரிக்க ஜெ. தரப்பு கோரிக்கை!

1991-96ஆம் ஆண்டு காலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். பல ஆண்டுகாலமாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென திமுக பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் நேற்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கள் தரப்பையும் வாதாட அனுமதிக்கவும் அரசு வழக்கறிஞருக்கு உதவவும் அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனு மீது பதிலளிக்க ஜெயலலிதா தரப்பு மற்றும் அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று பதில் மனுத்தாக்கல் செய்த ஜெயலலிதா தரப்பு, வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திமுகவின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications